எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Thursday, March 12, 2020

இஞ்சி சட்னி
இந்த இஞ்சி சட்னியை வேலூர் மாவட்டம் பகுதிகளில் ஆலம் பச்சடி என்று கூறுவர். மிகுந்த சுவையுடையது , இதை சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம், இட்லி , தோசை, பொங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இதன் சுவையில் நமது நாவு தாண்டவம் ஆடும்.
தேவையான பொருட்கள்
இஞ்சி 2 1/2 இன்ச்
கடலைப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 3
சின்ன வெங்காயம் 8
புளி 1 மேஜைக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
பூண்டு 2 பற்கள்
மரசெக்கு கடலெண்ணய் 1 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
தாளிக்க
மரச்செக்கு கடலெண்ணய் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
சீரகம் 1/4 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் 1 சிட்டிகை
வரமிளகாய் 1
செய்முறை
1. புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து நன்றாக கரைத்து புளி கரைசலை பிழிந்து எடுத்து வைத்து கொள்ளவும்.
2. இப்பொழுது வடச்சட்டியில் உப்பை தவிர அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறவைத்து கொள்ளவும்.
3. பிறகு மிக்ஸியில் நன்றாக வறுத்து ஆற வைத்துள்ள பொருட்களையும் , புளி கரைசல், தேவையான அளவு உப்புத்தூளையும் , தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.
4. இப்பொழுது வடைச்சட்டியில் 1 தேக்கரண்டி மரச்செக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல , கடுகு, சீரகம், பெருங்காயம், உளுத்தம்பருப்பு , வரமிளகாய் சேர்த்துகோங்க நன்றாக வதக்கி அதை இஞ்சி சட்னியில் சேர்த்து நன்றாக கிளறவும்.

No comments:

Post a Comment