சினிமாவிலிருந்து ஒரு புதிய பூதம் கிளம்பியிருக்கிறது அரசியலுக்கு- பஞ்ச் டயலாக் உடன்.
தமிழனுக்கு விழும் ஒவ்வொரு அடியையும் தன்மீது விழுந்த அடியாக நினைத்துப்போராடுவாராம் -
அண்மைக்காலம்வரை தமிழனுக்குத்தலைவலியாகவும், சினிமாவில் தளபதியாகவும் இருந்த நடிகர் விஜய்.
அவரது டயலாக் இன்படி இதுவரை தமிழன் அடிவாங்கிக்கொண்டேயிருக்கிறானே!
இவர் முதுகில் எத்தனை ’தமிழ்த்தழும்புகள்’ வைத்திருக்கிறார்?
ஈழத்தில் தமிழன் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டானே! அப்படிப்பார்த்தால், இவர் ஏழேழு தலைமுறைக்கும் உயிருடனேயே இருக்கக்கூடாதே!
இவ்வளவுக்குப்பிறகும், காங்கிரஸ் கட்சியிலேயே முக்கியபதவியைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தவர்தானே இவர்?
அதுவுமல்லாமல்,” ராகுலை ஏன் சந்தித்தீர்கள்?” என்ற நிருபர்களின் கேள்விக்கு, ராகுலின் கொள்கைகள் தனக்குப்பிடிக்கும் என்றும் , அதனாலேயே தாம் ராகுலைச்சந்தித்ததாகவும் ,திமிரோடு பதிலளித்தவர்தானே இந்த நடிகர் விஜய்?
ஈழத்தமிழர்களை ஒழித்துக்கட்டுவதையே தமது முக்கிய கொள்கையாகக்கொண்ட ராகுலைப்பிடிக்கும் என்றால் அதன் அர்த்தம்தான் என்ன?
தமிழனை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டுவது எனும் கொள்கை இவருக்குப்பிடித்திருக்கிறது என்றுதானே கொள்ளவேண்டும்?
இது வேறொன்றுமில்லை...
பெயரிடப்படாத விஜய் படத்துக்காக யாரோ எழுதிய வசனம். அந்த வசனத்தைப்பிரபலமாக்கி- பின்பு அதன்மூலம் படத்தைப்பிரபலமாக்கும் உத்தி இது.
ஈழத்தில் ஒருவன் தும்மினாலும்,அதை’ஈழத்துத்தும்மல்’ என்று பெயரிட்டு அதைப்பத்துமடங்கு பூதாகரமாக்கிப் பணம் பண்ணுவதைத்தவிர , உருப்படியாக என்னத்தைக் கிழித்துவிட்டார்கள் இவர்கள்?
கேவலம்,...அசின், அசித் திமிரையே அடக்கமுடியல - ஆ!...தவறு... விரும்பல.
குறைந்தபட்சமாக, திரையுலகிலிருந்து அவ்வப்போது நொதித்துச்சிதறும் நாற்றங்களை மறைக்கக்கூட முடியல.
தமிழைக் காப்பாத்தப்போறாராம் தமிழை.
முதல்ல, திரையுலக நாற்றத்திலிருந்து தமிழைக் காப்பாத்தட்டும்! தமிழ் தானாகவே வாழும்!
தமிழா! நீ எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது!
மீண்டும் மீண்டும் சகதியிலேயே போய் விழுந்துகொண்டிருக்காமல் -
தற்காலிக சுகங்களையே பெரிதென மதிக்காமல் -
நீண்ட தொலைநோக்குப்பார்வையுடன் வாக்களித்து, எமது எதிர்காலச்சந்ததியாவது-- சிவம் அமுதசிவம்
No comments:
Post a Comment