எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Monday, September 28, 2009

புலித்தோல் போர்த்த ஓநாய்கள் _ பிணம் புணர் கழுகுகள்!

அது நடந்ததா? _ நடந்துதான் விட்டதா? _ நம்பவே முடியவில்லையே! ஒருவேளை அது பொய்யாக இருந்திருக்குமோ?
இப்படி ,அங்கலாய்த்துக்கொள்ளும், தமிழர்கள் இன்றும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனில், இவர்கள் தமிழர்கள் . தமதுஇனம், உலகிலேயே தலைசிறந்த இனமாக விளங்கவேண்டும் எனும் கனவிலுள்ளவர்கள் ; அவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள்! _ அது தவறும் இல்லைத்தான்!
ஆனாலும், நானறிய எத்தனையோ இசுலாமியத் தமிழர்களே புலியின் வீழ்ச்சிபற்றித் தமது ஆழ்ந்த கவலையைத்தெரிவித்திருக்கிறார்கள். அந்தக்கவலைக்கு அவர்கள் சொன்ன காரணம்கூட, வெறும் ஒப்புக்குச் சொன்னதாகத் தெரியவில்லை.
அதாவது, " இன்று புலிக்கு _ நாளை நமக்கு" என்று அந்த இசுலாமியநண்பர் கூறியவார்த்தை ,அவரதுஆழ்ந்த தீர்க்கதரிசனத்தின் வெளிப்பாடாகவேஅமைந்திருந்தது.
அத்தோடு நில்லாமல் அவர் சொன்ன மற்றுமொரு சுவராசியமான விடயம் என்னை அசரவைத்தது.
”பிணம்தின்னிக்கழுகுகள் உலகெங்கும் காணப்படுபவை; ஆனால்,பிணம்புணர்கழுகுகள் சிங்களலங்காவில் மட்டுமே வாழக்கூடியவை.
மிருகங்களிடம் காணப்படும் அடிப்படைப் பண்பாடுகூட இல்லாத சிங்களனுடன் , மனிதன் எப்படிச் சேர்ந்துவாழமுடியும்?”
இந்தக்கேள்வி வெறுமனே என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியாக எனக்குத் தெரியவில்லை; மனிதகுலத்துக்கே விடுக்கப்பட்ட அறைகூவலாகத்தான் அது இருந்தது.யாழ்.குடாவிலிருந்து இசுலாமியத் தமிழர்களை வெளியேற்றிய விடயத்தில் அதிருப்தி கொண்டவராக இருந்தாலும் , அதைவிடக்கொடியவன் சிங்களன் என்பதை அவர் நன்குபுரிந்தேவைத்திருந்தார்.
இஃதிவ்வாறிருக்க, புலம்பெயர்நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களில் ஒருசிலர், ஏதோ சிலபல தனிப்பட்ட காரணங்களால்,தலைவர் பிரபாகரன் மீது கொண்டுள்ள பகைமையை முன்னிறுத்தி,புலிகளின் தற்காலிக வீழ்ச்சியை வெடிகொளுத்திக் கொண்டாடுவது வேதனைக்குரியது.
சரி! இவர்களைத்தான் ' அடிபட்ட பாம்புகள்' என்று எடுத்துக்கொண்டாலும், 'புலி ஆதரவாளர்களாகத் தம்மை இனங்காட்டிக்கொண்டவர்களில் ஒருபகுதியினர், இந்த ' புலி ஆதரவாளர்' என்று மக்களிடையே அறிமுகமான அந்தமுகத்தைப் பயன்படுத்தி, துரோகக்குழுக்களுடனிணைந்துகொண்டு , தமது வசதிவாய்ப்புக்களைப் பெருக்கிக்கொள்ளும் முயற்சியிலீடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மற்றுமொரு வேதனைதரும் செய்தி.
துரோகக்குழுக்களைவிடவும், இப்படியானவர்களில்தான் நாம் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ளது.
இவர்கள், மக்களிடம்செல்லும்போது,சொல்லிக்கொள்ளும் காரணங்கள்தாம் வினோதமானவை.

// எங்கள் கரிசனையெல்லாம் இப்போது மக்களைக் காப்பாற்றுவதுதான். புலியைப்பற்றியெல்லாம் இப்போது பேசிக்கொண்டிருக்க நேரமில்லை//

என்று பேச்சைக்கொடுத்து முதலில் பணத்தைப்பெற்றுக்கொள்ளும் இவர்கள், படிப்படியாக, துரோகக்குழு முகவர்களால் தமக்கு வழங்கப்பட்ட ' புலி எதிர்ப்பு' வசனங்களை விட்டுப்பார்ப்பார்கள் நாடிபிடித்துப் பார்ப்பதுபோல.யாராவது அதில் எடுபட்டுவிட்டால், அதையே தாம் செய்த சாதனையாக, துரோகக்குழு முகவர்களிடம் சமர்ப்பித்து, மேலும் பணத்தைப்பெற்றுக்கொள்வார்கள்.
இவர்களெல்லாம் உண்மையான தமிழர்களாக இருந்தால் , கொழும்பிலேயே கால்வைக்கமுடியாது. பிறகு எப்படி வன்னிக்குள் நுழையமுடியும்?
அல்லாமல், துரோகக்கும்பலின் வாலைப்பிடித்துக்கொண்டு போய்விட்டாலும் கொழும்பைத்தாண்டி அப்பணம் போகாது. அப்படிப்போனாலும் வன்னியிலுள்ள இராணுவக்காட்டேரிகளின் களியாட்டங்களுக்குத்தான் பயன்படுமேயன்றி, வாடும்நமதுறவுகளைச் சென்றடையச் சாத்தியமே இல்லை என்பதுதான் நிதர்சனம். இந்தச்சாதாரணமான உண்மையைக்கூட உணர்ந்துகொள்ள முடியாதவன்தான் தமிழன் என்று எதிரி முடிவே கட்டிவிட்டான். இவனது முடிவுக்கு நாம் துணைபோகத்தான் வேண்டுமா?
எத்தனை இடர்தான்வரினும், அன்னைதமிழுக்கு அவப்பெயர் ஏற்படவிடோம் என்று முழங்கவேண்டாமா?
உலகம் முழுவதிலிருந்தும் பிச்சையெடுத்து எமது மக்கள்மீது சிங்களம் ஆயுத வாந்தியெடுத்துவிட்டது.வன்னிமுகாங்களில் அடைபட்டிருக்கும் எமது உறவுகளின் நிலைமையை யாராலும் அவ்வளவு இலகுவில் விவரித்துவிடமுடியாது.
சுருங்கச்சொன்னால், ஆடுமாடுகளுக்குள்ள சுதந்திரம்கூட அவர்களுக்குக்கிடையாது.
பெண்கள் இயற்கைக்கடன்களைக்கழிப்பதிலிருந்து - குளிப்பது - ஆடை மாற்றுவது என்று அத்தனையும் இராணுவத்தின் கண்காணிப்பிலேயே நடக்கிறது. மூச்சுவிடுவதற்கும் அவர்களின் உத்தரவு பெறவேண்டியநிலை.
கடந்த 25 வருடங்களாகத் தனியே நின்று சமாளிக்கமுடியாமல், உயிர்பிழைத்தாற்போதுமென்று தப்பியோடிய சிங்களக்கோழைகள், இன்று நெஞ்சைநிமிர்த்திக்கொண்டு, கொஞ்சம்கூடக்கூச்சமில்லாமல் , 20 நாடுகளின் துணையுடன் வென்றோம் என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொக்கரிக்கிறார்கள்.
இவர்களின் இந்தக் கொக்கரிப்பே மறுதலையாக, 20 நாடுகளுடன் தன்னந்தனியாக இவ்வளவு காலமும் நின்றுபிடித்தவர்கள் எனும் பெருமையைப் புலிகளுக்கு வழங்குகிறது என்ற உண்மையைக்கூடப் புரிந்துகொள்ளுமளவுக்குப் புத்தியில்லாதவர்கள்.
பிச்சையெடுத்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு, தாயகத்தில் வாழும் தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிட்டோம் என்று ஆர்ப்பரிக்கும் சிங்களத்துக்கு, புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரிய தலையிடியாகவே தொடர்ந்துமுள்ளனர்.
ஆரம்பத்தில், " வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் கவனிக்கப்படுகிறது;இவர்கள்மீது கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும்" என்பது போலெல்லாம் பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
'நவயுக கிட்லர் ' ராசபட்சேயின் இந்த வெற்றுவேட்டுகளை, புலம்பெயர்ந்த தமிழர்கள் அலட்சியம் செய்ததால், வேறுவழியின்றி, புலிகள்பற்றிய கட்டுக்கதைகளைத் தமிழ்மக்களிடையே உலவவிட்டுப்பார்த்தனர். இதற்கெல்லாம் இங்குள்ள தமிழர்கள் மசியாததால், தமிழ்மக்களிடையே செல்வாக்குமிகுந்த சில ஊடகங்களை விலைக்குவாங்கத் தொடங்கினர்.
இந்த ஊடகங்கள் விலைக்குவாங்கப்பட்ட விடயம் பெரும்பாலும், ஐரோப்பியநேயர்கள் அறிந்ததுதான்.
ஆனாலும், பலர் அறியாத விடயமும் ஒன்று உள்ளது. ஐரோப்பாவிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்று, ஆரம்பத்திலிருந்தே சிறிலங்காவின் உளவுநிறுவனமாகச் செயற்பட்டுவந்திருக்கிறது என்பதுதான் அந்த விடயம்.
இந்தத்திடுக்கிடும் உண்மை தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகக் கசியத்தொடங்கியிருக்கிறது.
இத்தொலைக்காட்சிதான் கடந்தகாலங்களில் , புலி மற்றும் தமிழீழம் சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதுபோலப் பாசாங்குகாட்டிக்கொண்டே , கதிர்காமர்,டக்ளஸ் தேவானந்தா மற்றும் பல சிங்கள அமைச்சர்களின் ஐரோப்பிய விஜயத்தின்போது , கலையகத்துக்கே அழைத்துக் கௌரவித்துமிருந்தது.
புலி ஆதரவு ஊடகமாகத்தன்னைக் காட்டிக்கொள்ள முனையும் இவ்வூடகம், அவ்வப்போது, தனது உண்மைமுகத்தையும் காட்டிக்கொள்ளத்தவறியதில்லை. ஆனாலும் இங்குள்ள புத்திஜீவிகளோ புலித்தலைமையோ இதுபற்றி இதுவரையில் அக்கறைப்படாமலிருந்தமை வியப்புக்குரியதே!
இதன் பிரதான அறிவிப்பாளர் ஒருவரின் தலைமையில் ஒரு குழுவே இங்கு செயற்படுகிறது.இந்த அறிவிப்பாளரின் பணி, தாயகத்திலிருந்துவரும் புலிசார்புத்தலைவர்களை என்னென்ன கேள்விகள்கேட்டு மடக்கவேண்டுமென்று குழுவினருக்குத்தெரிவிப்பது; பிறகு தொலைக்காட்சியில் அந்தப்பிரமுகர் திண்டாடும்போது தாம் சிரித்துக்கொண்டிருப்பது.

இளைய அப்துல்லா எனும் புனைபெயருடன் இவர் தமிழ்மக்களிடையே பரப்பமுனையும் கொச்சையான சொற்களில் அமைந்த கவிதை. மேலும் இவருடன் சேர்ந்தவர்களின் வார்த்தைப்பிரயோகங்கள் என்று எல்லாமே இந்த ஊடகம் எங்கு நிற்கிறது என்பதைத்தான் நமக்குப் புலப்படுத்துகிறது.
இனியாவது விழித்துக்கொள்வோமா?

No comments:

Post a Comment