எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Wednesday, March 24, 2010

வத்திமன்னன் - சுகிசிவம்


ஐயா சுகிசிவம் அவர்களே! தாங்கள் ஒரு அறிவுக்களஞ்சியமேதான்; ஒப்புக்கொள்கிறோம்.
ஆனாலும் தங்களிடம் பொதிந்துள்ளஅறிவு, கொஞ்சம் அளவுகடந்துதுவிட்டதோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
தங்கள்பாணியிலேயே இதற்கு விடையளிக்க விரும்புகிறேன்.
‘அளவுக்குமிஞ்சினால் அமிர்தமும்நஞ்சு’ என்பது ஆன்றோர்வாக்கு.
நிரம்பி ‘வழியும்’ அறிவுகொண்ட தங்களுக்கு இந்தச்சின்னவகுப்புப்பாடம் தெரியாமலிருக்க நியாயமில்லை.
ஆனால், தாங்கள்இதிற்கையாண்ட சொற்பதங்களை அவதானித்தால், ’வெளிநாடுகளில் வாழ்பவர்களெல்லாம் சொகுசாகவாழ்கிறார்கள்’ எனும் பொறாமைதான் அதிற்பளிச்சிடுகிறது.
உண்மையிலேயே,அந்தமக்களுக்குஉதவுவதுதான் தங்கள்நோக்கமாக இருந்திருந்தால்:
‘எமதுமக்களுக்கு நாம்உதவாமல், வேறுயார் உதவுவார்கள்? அனைவரும்சேர்ந்து கைகொடுப்போம் வாருங்கள்!’ என்பதுபோலத்தான் அஃதமைந்திருக்கவேண்டும்.
இதைவிடுத்து, ‘ உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடிப்போனவர்கள்’ என்பதை, ஏதோ ஆரம்பப்பள்ளிஆசிரியர்போல அழுத்திச்சொல்லியிருக்கவேண்டிய அவசியமில்லை.
இந்த உயிரின்மீது யாருக்குத்தான் ஆசையில்லை. உங்களுக்கில்லையா? இல்லையேல் நீங்கள் தமிழர்இல்லையா? வாய்ப்புக்கிடைத்தால் எவரும் உயிரைக்காப்பாற்றிக்கொள்ளத்தான் செய்வார்கள் என்பது,மேதாவிகளுக்கு மட்டுமே புரியுமென்பதுமில்லை.
முள்ளிவாய்க்காலில் நமதுசொந்தங்கள் பதைக்கப்பதைக்க உயிரோடுபுதைக்கப்பட்டபோது, தாங்கள்எங்கு சந்திரமண்டலத்திலா இருந்தீர்கள்?
மேற்கத்தையநாடுகளில்வாழ்பவர்களைவிட, மிகஅருகில்-தாய்த்தமிழகத்திற்றானே இருந்தீர்கள்?
உங்கள் தொப்புள்கொடிஉறவுகளுக்குஉதவ, கால்நடையாகவேஅங்கு ஓடியிருக்கவேண்டாமோ?
சரி;அதுதானில்லை...அந்தஅவலங்களை நிகழ்த்தியவர்களுக்கெதிராக ஒருகுரலாவது கொடுத்திருக்கலாமே!
தமிழனின் வாழ்விடங்களையெல்லாம் அன்னியன் அழித்தொழிக்கும்வரை கண்களை இறுகமூடிக்கொண்டிருந்துவிட்டு -
தப்பித்தவறி, குண்டுவிழாத தமிழனின்வீடுகளில் எல்லாம்,அழித்தவனே குடியேறிநிலையெடுக்கும்வரை காத்திருந்துவிட்டு --
ஆக்கிரமித்தஎதிரியை இனி அசைக்கமுடியா தென்பதையும் உறுதிப்படுத்திக்கொண்டு -
தமிழனின் வீடுகளையே பறித்துத் தமிழனிடமே தரமுயற்சிக்கிறீர்கள்...
அதாவது, ‘ வழித்தேங்காயைத் தெருப்பிள்ளையாருக்கு’ அடித்துவிட்டு, அதே தேங்காயைச் சட்னிக்கும் பயன்படுத்தப்போகிறீர்கள்!- ’ஊராவீட்டுநெய்யே எம்பொண்டாட்டிகையே‘என்று...
உருக்குலைந்துபோன வீடுகளுக்காகத் தமிழனும் தமிழனுமே புடுங்குப்படட்டும் என்று மிகஅழகாக வத்திவைக்கிறீர்கள்.....
ஆஹா ! அறிவாளி மட்டுமல்ல.. நீங்கள் சகலகலாவல்லவன்! உங்களுக்கு‘சொல்வேந்தர்’ என்றொரு பட்டம் உள்ளதாமே!
இன்றிலிருந்து ‘ வத்திமன்னன்’ என்றபட்டத்தையும் ஈழத்தமிழர்சார்பாக உங்களுக்கு அளிக்கிறேன்.


அந்தநேரத்தில்,அங்கு வீடுமட்டுமா இல்லாமலிருந்தது?
காடையர்கள்வீசிய கொத்தணிக்குண்டுகள், இரசாயனக்குண்டுகளால் சுத்தமான காற்றே இல்லாமற்றானிருந்தது.
உண்ணஉணவில்லை; குடிக்கநீரில்லை; நிற்கவே இடமில்லை.
உடுக்கஉடையில்லை; ஏன்? உயிரேஇல்லை.
இல்லை இல்லை இல்லை இல்லை!
எங்கும் இல்லைமயமாகவே இருந்ததே!
அப்போது தாங்கள் என்னசெய்துகொண்டிருந்தீர்கள்?
ஒருவேளை இராமாயணசீதை அசோகவனத்திற்பட்ட அல்லலைநினைத்து அழுதுகொண்டிருந்தீர்களோ?
அழுதுகளைத்துவந்த கும்பகர்ணத்தூக்கத்திலிருந்து, இப்போதுதான் விழித்துக்கொண்டீர்களோ?
இவ்வளவுக்கும் திறவாதவாயை, தற்போது திறக்கவேண்டிய அவசியந்தான் என்ன?
கம்பன்கழகப்பட்டிமன்றம் எனும்போர்வையில் கொழும்புக்குச்சுற்றுலாச்சென்று, வீடுவீடாக விருந்துண்டுமகிழ்ந்தமைக்கு நன்றிக்கடன்செலுத்தவா?
மேற்கத்தையநாடுகளில்வாழும்தமிழர்களின் பெற்றோர்,உடன்பிறந்தோர்,சுற்றத்தார் ஆகிய இரத்தசொந்தங்களே ஈழத்தில்வாழ்கின்றனர்.
அக்கறையில்லாமலா அவர்களெல்லாம் ஆயிரக்கணக்கில்- இலட்சக்கணக்கில், கொட்டும்பனியையும் பொருட்படுத்தாது தெருவிலிறங்கிப் போராடினார்கள்?
அந்தப்போராட்டந்தானே இன்று, பலவழிகளில் அடக்கிவாசிக்கும்படி சிங்களத்தை மேற்குலகநாடுகள் வற்புறுத்தக்காரணமாய் அமைந்தது?
அதுமட்டுமா? ‘வணங்காமண்’ கப்பல்நிறைய அவசரஉதவிப்பொருட்களை அனுப்பிவைத்தார்களே!
அதைக்கூட, அவர்களுக்குக்கிடைக்கவிடாமல், உங்கள் ‘பெரியண்ணன் மகிந்தா’ தடுத்துவைத்ததை அறியாமலா இருந்தீர்கள்?
அக்கப்பல் சென்னைக்கும் வந்ததே! உள்ளூர்ச்செய்திகூடவா கிடைக்கவில்லை?
‘பிறர் கொடுப்பதைத்தடுப்பது பெரும்பாவம்’ என்பதற்கமைய, இப்பெரும்பாவத்தைப்புரிந்த அயோக்கியர்களுக்கெதிராகக்குரல்கொடுப்பது சான்றோர்களின்கடமை என்பது, தாங்கள்படித்த ஒருபுத்தகத்திற்கூடவா இல்லாமற்போயிற்று?
அவர்களின் சொந்தஉறவுகளின் மனநிலை,அவர்களைவிடவும், ஒருநாள்போய்விருந்துண்ட உங்களுக்கு அதிகமாகப்புரியும் என்றுநினைக்கிறீர்களா?
ஈழமக்களைப்பொறுத்தவரை, கஷ்டங்கள்-துன்பங்கள் என்பது _ இன்றுநேற்றல்ல! காலங்காலமாகவே பழகிப்போனசங்கதி. ஒருவீடு மட்டுமல்ல!;கிராமம்கிராமமாகவே வீடுகளைச்சிங்களரிடம் பறிகொடுத்தவர்கள்அவர்கள்! வெளிநாட்டிலுள்ளவர்களின்வீடுகளை வாங்கித்தரும்படி, உங்களைத் தூதனுப்பியிருக்கிறார்கள் என்கிறீர்கள். இது நம்பக்கூடியதாகவா உள்ளது?
நிச்சயமாக நீங்கள் விருந்துண்டஇடம், ஒரு தமிழினத்துரோகியின் வீடாகத்தான் இருக்கவேண்டும்.
ஏனெனில் நாமறிந்தவரை, இத்துரோகிகள்தாம் ஈழத்தில் மட்டுமல்லாது அனைத்துலகமட்டத்திலும்,இக்கட்டான இந்தநேரத்தைப்பயன்படுத்தி, மக்களின்தன்மானஉணர்வுகளை மழுங்கடிக்கும் முயற்சியிலீடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நீங்களும் ’யானைபார்த்த குருடனாக’ , துரோகிகளைமட்டும் தடவிப்பார்த்துவிட்டு துரோகத்துக்கொரு கருவியானமை துரதிஷ்டமானதே!
உங்கள் கருத்துப்படிபார்த்தால், தமிழகத்திலேயே வீடற்றவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்களல்லவா? அவர்களில் ஒருவருக்கேனும் உங்கள்வீட்டுக்கொல்லைப்புறத்திலாவது இடங்கொடுத்திருக்கலாமே!
கோவணத்துக்கும் வழியற்ற அந்தமக்களுக்கு, தோளிலணிந்திருக்கும் துண்டையேனும் கொடுத்துவிட்டுப் போயிருக்கலாமே!
‘ஊருக்குபதேசம் உனக்கல்லடி’ என்றகதையாகத்தான் உள்ளதுஉங்கள்பேச்சு!

வெளிநாடுகளில் வாழ்வதுபற்றி இவ்வளவு ஏளனமாகப்பேசுகிறீர்களே!
சொந்தமக்கள் வெள்ளையனிடம் வதைபட்டுக்கொண்டிருந்த அந்தநேரத்தில்
உங்கள்காந்தியாரும் பட்டப்படிப்பும் பகட்டுவாழ்க்கையும் என்று இங்கிலாந்தில்இருந்தவர்தானே!
அதுமட்டுமன்றி, இந்தியாவில் இருந்தவரையிலும் சொந்தமக்கள்பட்ட துன்பங்களைக் கண்டுகொள்ளாமலிருந்துவிட்டு, எங்கோ அந்நியதேசமான தென்னாபிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்காகக்குரல்கொடுத்தவர்தானே!
அதன்பிறகுதானே இந்தியாவைப்பற்றி நினைத்தார்?

”சீனாக்காரன் ஏதோ புடுங்கவருகிறான்;அதனால் இந்தியாவுக்குக் குலைநடுங்குகிறது ;
இந்தியாவின்நிலைமையை நாம்யோசிக்கவேண்டும்”என்றுஎமக்கு
அறிவுறுத்தவரும் நீங்கள் -
முதலில்,உங்கள்தொப்புள்கொடி?உறவுகளான எமதுநிலைமையை ஏன்யோசிக்கவில்லை?

உங்கள் இந்தியஎசமானர்களுக்கு இருப்பதோ எதிர்காலப்பிரச்சினை; உங்கள் தொப்புள்கொடிகளுக்கோ,’வாழ்வா சாவா ‘ என்ற நிகழ்காலப்பிரச்சினை.

’முக்கியத்துவம் ‘ என்றதலைப்பில் ‘ இந்தநாள் இனியநாள்’ வந்தால் எதைச்சொல்வீர்கள்? ஒருவேளை சூரியகுடும்பத்துடன்(sun) சேர்ந்ததோஷம் - இரண்டையும் தவிர்த்து உங்கள் மனைவி,பிள்ளைகளைத்தான் சொல்வீர்களோ?
கேடுகெட்டசிங்களன்,கொத்துக்கொத்தாகக் குழந்தைகளையேகொன்றொழித்தானே!
பக்தர்களுடன் சேர்த்தே வழிபாட்டுத்தலங்களையும் -
மாணவர்களுடன் சேர்த்தே பாடசாலைகளையும் நிர்மூலமாக்கினானே!
இவைகளில் ஒன்றுகூட உங்களுக்குப் பெரிதாகப்படவில்லையா?
ஐ.நா,செயலர் பான் கி மூன் அவர்களே “ இதுவரை உலகில் எங்குமே இதுபோன்றபேரழிவைக் கண்டதில்லை” என்று சொல்லுமளவுக்கு நடந்தேறிய இந்தஇனப்படுகொலை, உங்களை இம்மியளவும் பாதிக்கவில்லையா?
இவையனைத்தையும்விட, ‘ தமிழனின் உடைந்தவீடுகள்’தாம் உங்கள் கண்களை உறுத்துகிறதா?
சரி; இவைகளைத்தான் விட்டாலும் - உங்களுக்குச்சோறுபோடும் ‘ இந்தநாள் இனியநாள்’ இல் நாளுக்கொருதலைப்பில் ஏதாவதுசொல்ல உதவும் புத்தகங்களையே, நூலகத்துடன் சேர்த்து எரித்தானே!
புத்தகங்கள் என்பது உங்கள் தாய்க்குச்சமமல்லவா?
அதையாவது கண்டிக்கவேண்டும் என்று உங்களுக்குத்தோன்றவில்லையா?
சரி, அதையுந்தான் விட்டுத்தள்ளுங்கள் ; அவ்வப்போது விஞ்ஞானரீதியான கருத்துக்களைஉதிர்த்து, நாத்திகவாதிபோலடையாளங்காட்டிக்கொண்டாலும் -
ஆகமவிதிகள், பிதிர்க்கடன்கள் அவசியமானவைஎன்று குத்துக்கரணமடித்து, பணம் சம்பாதிக்க உங்களுக்கு உதவும் இந்துஆலயங்களையெல்லாம் இடித்துத்தள்ளினார்களே!
அதிலாவது உங்கள் மனம் பதைக்கவில்லையா?


மீண்டும் உங்கள்பாணியிலேயே பதிலளிக்கிறேன்:
தாயகத்தைப்பிரிந்திருப்பது தவறாகாது; மாறாக, தாயகத்தை மறந்திருப்பதுதான் மாபெரும்தவறு.

உங்கள் பெயருக்கேற்றவாறு தாராளமாக நீங்கள் சுகித்திருங்கள்.
ஆனால், தயவுசெய்து எமது விடுதலைப்போராட்டத்தை_ எமது இனஉணர்வை மட்டும் கொச்சைப்படுத்தாதீர்கள்.

அங்கே ஆடுகள்நனைகின்றன என்பது உண்மைதான்; அதற்காக நீங்களும் ஓநாய்களுக்குத் துணைநிற்காதீர்கள்!

இதுவே எமதுவிடுதலைக்கு நீங்கள் செய்யக்கூடிய மாபெரும் உதவி!

_ சிவம் அமுதசிவம்

3 comments:

  1. அதுமட்டுமில்ல... சிங்கள ஆட்சியாளர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தட்டாம்.இப்பிடித்தான் ‘சிங்களவர் கோபப்படும்வகையில் பேசவேண்டாம்’ என்று யாரோ ஒருதுரோகி முந்திச்சொன்னவன். அதைத்தான் இப்ப இவர் பாஷை மாத்திச்சொல்லுறார்.
    இப்பவிளங்குதே இவருக்குப் பிரதான பணவழங்கல் எங்கையிருந்து வருகுதெண்டு?ராஸ்கல்...

    ReplyDelete
  2. இந்தியாவும் இல்லன்கையும் ஈழத்தில் குண்டு போடும் போது இது வெளிநாட்டவர் வீடு என்று விட்டு வைதுதுதான் குண்டு போட்டார்களா .. , எல்லாமே போச்சே.. , அங்கு எல்லோரிடமும் விடு இருந்த்தது, இப்போது அங்கு ஒன்றும் இல்லை..,வீடு போன போகுது வீடு , மசிரு , உசிரு போகுதே வருமா...? , உங்க ஆளுக எல்லாம் நல்ல நடிப்பீங்க, பேசுவீங்க.. , இந்த வீர வசனங்கள் எல்லாம் நம்மளுக்கு தெரியாதுங்கோ , நமக்கு தெரிஞ்சது எல்லாம் .. அக்கா, அண்ணா, தம்பி , தங்கச்சி, மாமா மாமி, அம்மா, அப்பா ...., .. தொப்புள் கொடி உறவு என்பது (எதோ மல்லையாள பட தலைப்பு மாதிரி இருக்கா..? புதுவை இரத்தின துரையின் உங்களை நோக்கிய கடைசி நேர குரலை கேட்டல் அதட்ட்கு அர்த்தம் புரியும்.....) எங்கள் உயிர், உடல் ஆவி எல்லாமே...., எமது உறவுகளுக்காக மட்டும் தான்.... நாம் இங்கு இருக்கிறோம் .

    ReplyDelete
  3. நன்றிகள் உங்கள் ஆக்கத்திற்கு இவை ஒநாய்கள் அல்ல கசாப்பு கடைக்காரன் ஆடு நனைவது என்று அழுவது போல் இருக்கின்றது

    ReplyDelete