எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Wednesday, March 24, 2010

நிர்வாணம் - மட்டுவில் ஞானக்குமரனின் கவிதை

நிர்வாணம்
இந்தியா !
நீ ஒரு வல்லரசென்பது
மெத்தச்சரிதான் !
மண்டையோடுகளின் மேலே
வேறு யார்வந்து கொடிநாட்டுவார் ?
உனக்கோ _
கிழித்துப்படிக்க
உடல் இல்லை என்ற கவலை....
எமக்கோ _
விழுந்த சடலங்களைப் புதைக்கத்
திடல் இல்லையென்ற கவலை.
நீ ஒரு சனநாயகநாடாமே?
கஞ்சனுக்குக்
கர்ணன் என்றபெயர்போலில்லையா?
காந்திசிலை போலவே
உனதுஅறநெறியும்
நடுத்தெருவிலேயே நிற்கிறது.
நீகொடுத்த நிவாரணம்கூட
ஆக்கிரமிப்பெனும்
நிர்வாணத்தை மறைக்கும்
ஆடைதானே !
நாம்கேட்ட தஞ்சம்கூட
கசாப்புக்கடைக்காரனிடம்
அடைக்கலம்புகுந்த
ஆடுபோலில்லையா ?
நீ வலிசெய்தால் _ அது
மனிதநேயமென்றும்...._உனக்கு
யாரும்வலிசெய்கில் _ அதுவே
மானிடவிரோதமென்றும்
கூறுவதானது _
கோவணத்தை எடுத்துத்
தலைப்பாகை கட்டுவது
போலில்லையா ? _மட்டுவில் ஞானக்குமரன்.

1 comment: